Friday, June 29, 2007

சவுதி ஆட்டம் - 1

முதன் முதலில் வெளிநாடு சென்று வேலை பார்க்க போகிறேன். உற்றார், உறவினர், நண்பர்கள் என்று வஞ்சனையில்லாமல் எல்லோருக்கும் என் பயணத்தைப் பற்றி தெரிவித்திருத்தேன். நட்புக்காக உயிரையும் கொடுக்க கூடிய பாஸ்கர், அப்போதுதான் 4 வருட பொறியியல் படிப்பை 8 வருடங்களில் முடித்திருந்தான். வீட்டிற்கு ஒரே பிள்ளை என்பதால் மதுரைப்பக்கம் மட்டும் வேலை தேடிக்கொண்டிருந்தான் பெற்றோரின் அறிவுரைப் படி. சீனியை சென்னையிலிருந்து வழியனுப்பிவிட்டு வருகிறேன் என்று வீட்டில் கூறி மும்பை வந்திருந்தான்.

குறிக்கப்பட்ட நாளில் உற்றார், உறவினர், நண்பர்கள் புடைசூள விமான நிலையம் வரை சென்று விமான சீட்டு / கடவு சீட்டு பிரச்சனையால் 2 நாட்கள் கழித்து பயணமானேன். சவுதியா விமானத்தில் முதலில் அரபியில் இறைவனை வேண்டினார்கள். புரண்டு, உருண்டு வளர்ந்ததெல்லாம் முஸ்லிம் தெருவிலும் பள்ளிவாசல் என்பதால் ஒன்றும் வித்தியாசமாக தெரியவில்லை.அடுத்த மதத்தைப் பற்றி தெரிந்து வைத்திருந்தால் ' religious tolerance' கொஞ்சம் இருக்கும் என்பது என் நம்பிக்கை. அதை சிறு வயதிலிருந்தே கொண்டு வந்தால்தான் முடியும். சிங்கப்பூரில் பள்ளியிலிருந்து குழந்தைகளை மற்ற மத வழிபாடு இடங்களுக்கு அழைத்து செல்வார்கள். கோயில், பள்ளிவாசல், குருத்வாரா உள்ளே என்ன நடக்கிறது, எப்படி வழிபடுகிறார்கள், மற்ற மத நம்பிக்கைகள் பற்றி சிறு வயதில் அறிந்தாலே நாட்டில் கொஞ்சம் மத வெறி குறையலாம்.

விமானத்தின் பின்புறம் நாலைந்து அரபியர்கள் புகைத்து கொண்டிருந்தார்கள். பணிஆண்கள் சாப்பாடு பரிமாறினார்கள். குடிக்க தண்ணீர் மட்டும்தான். alcohol க்கு தடா. தமாம் விமான நிலையத்தில் தரையிறங்கியது. எல்லா பெட்டியையும் எடுத்துக் கொண்டு வெளியே வரும் போது ' பெட்டிகள் சோதனை' என்றார்கள். மிக நீள மேசையில் ஒவ்வொரு பெட்டியையும் பிரித்து மெய்ந்து கொண்டிருந்தார்கள் இரண்டு அரபியர்கள்.
முதன் முதலில் சவுதி என்பதால் ஏன்? எதற்கு? எப்படி? என்று கேட்காமல் (கேட்க முடியுமா?) நானும் பெட்டியை திறந்து வைத்தேன். எனக்கு முன் உள்ளவனுடைய ( பார்த்தால் நம்ம ஊர் மாதிரி இருந்தான்) பெட்டியை சோதித்து உள்ளே இருந்து போஸ்ட் கார்டு அளவில் உள்ள பிள்ளையார்பட்டி பிள்ளையார் புகைபடத்தை எடுத்தான் அரபி. நம்மாளை ஒரு முறை முறைத்து விட்டு நான்காக கிழித்து குப்பையில் எறிந்தான் பிள்ளையாரை. நம்மாளோ ' ங ' என்று விழித்தான். நான் அதிர்ந்தே விட்டேன். அடுத்து என் பெட்டியை பார்த்தான். துணிகள் அழகாக மடிக்கப் பட்டதை பார்த்து எதையும் கலைக்காமல் அடியில் உள்ளே கை விட்டான். பெட்டியை இரண்டு முறை சுண்டி தட்டி பார்த்தான். என்ன நினைத்தானோ என்னை போக சொல்லிவிட்டான். நான் கொண்டு சென்றது தப்பித்தது. பெட்டியை எடுத்து வைத்துக் கொண்டிருந்தேன். அடுத்து வந்த மலையாளத்தானை சோதனையிட்டான். அவன் என்னை போல புதிது போல. உள்ளேயிருந்து ஒரு நூலை எடுத்து அவனிடம் காண்பித்து ' இது என்ன?' என்று வினவினான். அவன் ' பைபிள்' என்றான். அதை கிழிக்கா முடியாததால் குப்பையில் எறிந்தான் அரபி.

கைப்பற்றியதை எல்லாம் என்ன செய்வார்கள்? படித்து பார்ப்பார்களா? எரித்து விடுவார்களா? பக்கோடா பொட்டலம் போட பயன்படுத்துவார்களா? யோசித்துக் கொண்டே வெளியே வந்தேன். பின்புதான் தெரிந்தது, சோதனையிடுவது மாற்று மத நூல்களையும், விக்ரகங்களையும், படங்களையும் தடுப்பதற்கு மட்டுமல்ல, நீல படங்கள், மஞ்சள் பத்திரிக்கை, ஒலி நாடா ( என்ன கலர்? ) மற்றும் போதை மருந்துகளை தடுப்பதற்க்காகவுமே. இதில் வேடிக்கை என்னவென்றால் மேற் கூறிய எல்லாம் சவுதிக்குள் தாராளமாக புழங்குவது எல்லோரும் அறிந்த உண்மை.



சவுதி ஆட்டம் தொடரும் .....

12 comments:

said...

:)
நல்லா எழுதறீங்க.

உங்கப் பதிவை வவா சங்கம் பரிந்துரைக்கிறது

said...

எல்லோருக்கும் தெரிந்த,அவனுக்கு தெரிந்த/தெரியாத உண்மையை இங்கு சொல்லி புரியவைத்தற்கு நன்றி.

Anonymous said...

you are accepting the treatment :
//பெட்டியை சோதித்து உள்ளே இருந்து போஸ்ட் கார்டு அளவில் உள்ள பிள்ளையார்பட்டி பிள்ளையார் புகைபடத்தை எடுத்தான் அரபி. நம்மாளை ஒரு முறை முறைத்து விட்டு நான்காக கிழித்து குப்பையில் எறிந்தான் பிள்ளையாரை. நம்மாளோ ' ங ' என்று விழித்தான். நான் அதிர்ந்தே விட்டேன். அடுத்து என் பெட்டியை பார்த்தான். துணிகள் அழகாக மடிக்கப் பட்டதை பார்த்து எதையும் கலைக்காமல் அடியில் உள்ளே கை விட்டான். பெட்டியை இரண்டு முறை சுண்டி தட்டி பார்த்தான். என்ன நினைத்தானோ என்னை போக சொல்லிவிட்டான். நான் கொண்டு சென்றது தப்பித்தது. பெட்டியை எடுத்து வைத்துக் கொண்டிருந்தேன். அடுத்து வந்த மலையாளத்தானை சோதனையிட்டான். அவன் என்னை போல புதிது போல. உள்ளேயிருந்து ஒரு நூலை எடுத்து அவனிடம் காண்பித்து ' இது என்ன?' என்று வினவினான். அவன் ' பைபிள்' என்றான். அதை கிழிக்கா முடியாததால் குப்பையில் எறிந்தான் அரபி.//

No more explaination . I agree Saudi is based onMuslim country then you shoud not advise for india


For india you are suggesting :
//மத நம்பிக்கைகள் பற்றி சிறு வயதில் அறிந்தாலே நாட்டில் கொஞ்சம் மத வெறி குறையலாம் //

Why ? it is all Money . Same for everyone .Hindus are less Money power compared to Christians and Muslims in entire world . so Hindus are always at fault when one guy done some mistake agaist non hindu then so called other relious persons say " india (hindu) become intolrent to other religions

Hats off!!

Anonymous said...

Sir,
I advice you , Not even think of writing about saudi.You will have lot of oppossiton and u will start recving valgur mails.You know what happen to calcagry siva..

said...

Good information & Nice article

said...

Good writing style. Interesting

said...

நன்றி இளா..

said...

இதனால் சகலமானவர்களுக்கும் அறிவிப்பது என்னவென்றால். நான் மதம் ஜாதி பற்றி விவாதிக்க எழுதவில்லை. அது என் வேலை அல்ல. எனக்கு நானே எந்தவித மத சாயம் பூச விரும்பவில்லை. இதுவரை 13 நாடுகளில் வேலை பார்த்திருக்கிறேன். என் அனுபவம், என் எண்ணங்கள், என் பார்வையில் மற்ற நாடுகள், மக்கள் மற்றும் என்னை சுற்றி நடந்த சம்பவங்கள் பற்றி எழுத நினைத்திருக்கிறேன்.
அதனால் தயவு செய்து என் எழுத்துக்கு மத சாயம் பூசாதீர்கள்.


நன்றி

Anonymous said...

மதச் சார்பற்ற இந்தியாவில் ஒரு சட்டசபை உறுப்பினர் கோயிலுக்கு சென்றதை கண்டித்து கோயிலை கழுவி சுத்தம் செய்தபோது சவூதி அரசாங்கம் அப்படி நடந்து கொண்டதில் தவறேயில்லை

Anonymous said...

very interesting.. Increase the size of tamil font...it is very small and needed more concentration to read...

keep going and good luck...

said...

//மதச் சார்பற்ற இந்தியாவில் ஒரு சட்டசபை உறுப்பினர் கோயிலுக்கு சென்றதை கண்டித்து கோயிலை கழுவி சுத்தம் செய்தபோது சவூதி அரசாங்கம் அப்படி நடந்து கொண்டதில் தவறேயில்லை //

ஏர்போட்டுக்கு, வழிப்பாட்டு தளத்துக்கும் நிறையா வித்தியாசம் இருக்குங்க... சும்மா எல்லாத்துக்கும் முடிச்சு போட கூடாது, நல்லா யோசிச்சு பாருங்க புரியும்... சும்மா யாராவது ஒரு பக்கம் ஆத்ரவு சொல்லனும் என்பதற்காக பேச கூடாது

said...

நல்ல எழுத்து நடை. வாழ்த்துக்கள் !!